பெறுநர்
பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர் தொகுதி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்ககம்,
சென்னை – 6.
மதிப்புமிகு அய்யா,
பொருள்:
கல்வி - பள்ளிக்கல்வி - இடைநிலைக்கல்வி உயர் மேல்நிலைப்பள்ளி - இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்துதல் - சார்பு
கல்வி - பள்ளிக்கல்வி - இடைநிலைக்கல்வி உயர் மேல்நிலைப்பள்ளி - இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்துதல் - சார்பு
பார்வை:
1. பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலாளர் கடித எண்.19618 எம்1-2009 நாள் 30.07.2009.
1. பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலாளர் கடித எண்.19618 எம்1-2009 நாள் 30.07.2009.
2. தங்களின் செயல்முறைகள் ந.க.எண்.79809/C5/ F4/2009. நாள் 18.01.2010
தமிழ்நாட்டில் உயர்-மேல் நிலைப்பள்ளிகளில் 28000 இடைநிலை ஆசிரியர்கள் (அரசுப்பள்ளிகளில் 16812 பேர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 11200 பேர்) 3-009-2006ன் நிலவரப்படி பணியாற்றி வருகின்றனர். அரசாணை 100ன்படி பட்டதாரி ஆசிரியர்கள் எங்களது பணியிடங்களில் 2004 முதல் நியமனம் பெற்று வருகின்றனர். எனவே ஒரே பணி இருவேறு ஊதியம் என்ற நிலை உள்ளது. இது தொடர்பாக கடந்த முன்று ஆண்டுகள் எங்களது அமைப்பு நடத்திய தொடர் இயக்க நடவடிக்கைகள் முலம் பார்வை 1-ல் கண்ட கடித அடிப்படையில் தங்களிடம் விவரங்கள் பெறப்பட்டு பார்வை 2ன் அடிப்படையில் தாங்கள் விவரங்களை அனுப்பியுள்ளீர்கள்.
28000 இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் “இளநிலை ஆசிரியர் இடைநிலை ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்டது போல் மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்டது போல்” இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவண்,
இடம்: சென்னை,
நாள்:12-04-2010.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக