"பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட
அனைத்துப் பிரிவினரும், முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டும்,'' என,
துறைக்கு, புதிய அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.
அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது முதல், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக
சி.வி.சண்முகம் பதவி வகித்து வந்தார். இவரை மாற்றிவிட்டு, வணிக வரித்துறை
அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, புதிய கல்வி அமைச்சராக
நியமிக்கப்பட்டார். முதலில் உணவுத் துறை, இரண்டாவதாக வணிக வரித்துறை என,
தற்போது மூன்றாவது துறைக்கு மாறியிருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, துறை
உயர் அதிகாரிகளுடன், துறை செயல்பாடுகள் குறித்து, டி.பி.ஐ., வளாகத்தில்
நேற்று ஆய்வு செய்தார்.
துறையின் முதன்மைச் செயலர் ஸ்ரீதர், அனைவருக்கும்
கல்வி இயக்குனர் முகமது அஸ்லம், பள்ளிக் கல்வி இயக்குனர் மணி, தொடக்கக்
கல்வி இயக்குனர் சங்கர், ஆசிரியர் கல்வி இயக்குனர் தேவராஜன்,
ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்குனர் இளங்கோவன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும்,
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும்
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். துறை வாரியான செயல்பாடுகள் குறித்தும்,
தற்போது நடந்து வரும் பணிகள் குறித்தும், அந்தந்த துறை அதிகாரிகள்
விவரித்தனர்.
கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது:
கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது:
தமிழகத்தில்
எழுத்தறிவு பெற்றோர் சதவீதம், 80.33ஆக உள்ளது. இதில், ஆண்கள் 86.81
சதவீதமாகவும், பெண்கள் 73.86 சதவீதமாகவும் உள்ளனர். பெண் கல்வியை
வளர்க்கும் வகையில், கல்வியில் பின் தங்கியுள்ள 38 தாலுகாக்களில்,
பெண்களுக்கான தேசிய தொடக்கக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அரசு
செயல்படுத்தி வருகிறது. இவை எல்லாம் மக்களிடம் செல்லும் வகையில், துறை
அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட அனைவரும், முழு அர்ப்பணிப்புடன் செயல்பட
வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக
நடைமுறைப்படுத்துவதிலும், அனைவரும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக