தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி, வினாடி- வினா,
கருத்தரங்கம் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகள் நடத்த வேண்டும். இந்த கண்காட்சிகளில் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் பிரச்னைகள், அன்றாட வாழ்வில் கணிதப்பயன்பாடு, பேரிடர் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் கண்காட்சி பொருள்கள் இடம் பெற வேண்டும்.
துவக்க, நடுநிலைப்பள்ளிகள், கிராம கல்விக்குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் கண்காட்சியை கண்டுகளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நவம்பர் இரண்டாவது வாரத்தில் கல்வி மாவட்ட அளவில் நடத்தப்படும் கண்காட்சியில் பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை அறிவியல் ஆசிரியர்கள் கொண்ட குழு அமைத்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் வினாடி-வினா, சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள் நடத்த வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். தேர்வு செய்யப்படும் படைப்புகள் நவம்பர் இறுதியில் வருவாய் மாவட்ட அளவிலான கண்காட்சியில் இடம் பெற வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் படைப்புகள் மாநில கண்காட்சியில் இடம் பெற வேண்டும்.
இது குறித்து அனைத்து முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக