ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் தொடர்பாக, பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் தொடர்பாக, 1988ம் ஆண்டு தொழிலாளர் நலத் துறை அரசாணை பிறப்பித்தது. பின், 2003ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சிறுபான்மை பள்ளிகள் மற்றும் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சேவியர் அருள்ராஜ், சந்திரசேகரன் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில், "வர்த்தக ரீதியில் பள்ளிகளை நடத்தவில்லை. தொழிலாளர் தொடர்பான பல்வேறு சட்டங்கள், ஆசிரியர்களை தொழிலாளர்களாகக் கருதவில்லை. எனவே, ஆசிரியர்களுக்கு இந்த அரசாணைகள் பொருந்தாது" என குறிப்பிடப்பட்டது.
மனுக்களை விசாரித்த நீதிபதி ராஜா பிறப்பித்த உத்தரவு: ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில், நீதிபதி இக்பால் (சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி) தலைமையிலான, "டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவில், "கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கிளார்க், பியூன் உள்ளிட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் சட்டம் பொருந்தும். அவர்கள் குறைந்தபட்ச ஊதியம் பெற உரிமையுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின்படி, ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் வரம்புக்குள் வருவர். ஆசிரியர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டம் பொருந்தாது. எனவே, ஆசிரியர்களை பொறுத்தவரை இந்த அரசாணைகள் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி ராஜா உத்தரவிட்டுள்ளார்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக