தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.5.12

TET வினா விடை - சமூக அறிவியல் - பொது 10


1.      ISRO - Indian Space Research Organization
2.      NASA - National Aeronauntics and Space Administration
3.      சட்டங்கள் வகுக்கக் காரணம் - பொது நன்மைக்கே
4.      இந்தியா அரசியலமைப்பு - உலகிலேயே மிகவும் பெரிதானது
5.      இந்தியா அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950
6.      இந்தியாவின் குடியரசு நாள் - ஜனவரி 26, 1950
7.      இந்தியா ஒரு - இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு
8.      இந்தியாவில் வாக்களிக்கும் வயது - 18
9.      மக்கள் நலம் காப்பதில் அரசுக்கு வழிகாட்டியாக இருப்பது - வழிகாட்டும் நெறிமுறைகள்
10.   மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் - 545
11.   மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்கள் - 250
12.   மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 12
13.   மாநிலங்களவை உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது - 30
14.   மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் - 6 ஆண்டுகள்
15.   மக்களவையில் பதவிக் காலம் - 5 ஆண்டுகள்
16.   மாநிலங்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை - 238
17.   இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு 1952
18.   மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
19.   மக்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2
20.   மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை - 543
21.   இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள அவைகள் - இரண்டு, மக்களவை, மாநிலங்களவை
22.   மாநிலங்களவையின் பதவிக் காலம் - நிரந்தரமானது
23.   இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை - 32
24.   மாநிலங்களின் ஆளுநரை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்
25.   அமைச்சரவை சகாக்களுக்குத் துறையை ஒதுக்கீடு செய்பவர் - பிரதம அமைச்சர்
26.   பிரதம அமைச்சரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
27.   இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
28.   இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்
29.   இந்தியாவின் முதல் மக்களவை பெண் தலைவர் - மீரா குமார்
30.   அரசாங்கத்தின் சக்தி வாய்ந்த தலைவர் - குடியரசுத் தலைவர்
31.   புது தில்லி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - 70
32.   புது தில்லி தேசிய தலைநகராக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1991
33.   இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலன் - உச்ச நீதிமன்றம்
34.   சார்க் அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை - 8
35.   இலட்சத் தீவுகளின் தலைநகரம் - கவரத்தி
36.   தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் தலைநகரம் - சில்வாசா
37.   அந்தமான்  நிகோபார் தீவுகளின் தலைநகரம் - போர்ட் பிளேயர்
38.   மத்திய அரசு நேரடியாக ஆட்சி செய்யும் பகுதிகள் - மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள்
39.   முதலமைச்சரை நியமனம் செய்பவர் - மாநில ஆளுநர்
40.   தமிழ்நாட்டில் தற்போது உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 234
41.   மாநிலங்களின் ஆளுநரை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்
42.   பாண்டிய நாடு உள்ளடக்கிய பகுதிகள் - மதுரை, இராமநாதபுரம்
43.   மதுரை யாருடைய தலைநகரம் - பாண்டியன்
44.   வெண்ணாறு கால்வாயை வெட்டியவர் - கரிகாலன்
45.   புலவர் பிசிராந்தையாரின் நண்பனாக விளங்கிய சோழ மன்னர் - கோப்பெருஞ்சோழர்
46.   வேளிர் என்பவர்கள் - மலை நாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள்
47.   கல்லணையை கட்டியவர் - கரிகாலன்
48.   வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களை தோற்கடித்தவர் - கரிகாலன்
49.   பெருநராற்றுப்படையை இயற்றியவர் - முடத்தாமக் கண்ணியார்
50.   பட்டினப்பாலையின் ஆசிரியர் - உருத்திரங்கண்ணனார்.


நன்றி:


 

TET வினா விடை - சமூக அறிவியல் - பொது 9

1. இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி - தக்காண பீடபூமி
2. தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்
3. மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.
4. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா
5. தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் - பிச்சாவரம்
6. இபின் பதூதவின் நாடு - மொராக்கோ
7. தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் - ஆனைமலை
8. Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் - டாக்டர் அசிமா சாட்டர்ஜி
9. ஒட்டக சவாரி காணப்படும் இடம் - ஜெய்பூர்
10. கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி - பாலக்காடு கணவாய்
11. உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் - ஸ்புட்னிக்
12. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு - நாய்
13. விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் - லைகா
14. முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ரஷ்யா
15. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை - ஸ்பேஸ் சூட்
16. அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணிபுரிந்தவர் - சுனிதா வில்லியம்ஸ்
17. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் - கிரவுதர் பால்
18. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் - மான்ஸ்டர் ஸ்டார்
19. தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் - இந்தியப் பெருங்கடல்
20. அரசுக்குட்பட்ட நிறுவனங்கள்- பொதுத் துறை நிறுவனங்கள்
21. மருத்துவ அவசர ஊர்தி எண் - 108
22. தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் - 101
23. காவல் நிலைய அவசர உதவி எண் - 100
24. பெரிய நகரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு - மாநகராட்சி
25. ஊராட்சி செய்து தரும் வசதிகள் - தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகள்
26. நெல் விளைய தேவையான மண் - வண்டல் மண்
27. இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் உணவு - அரிசி
28. தமிழர்களின் அடிப்படை உணவு - அரிசி
29. திண்டுக்கல் - பூட்டு
30. சேலம் - மாம்பழம்
31. தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை
32. செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - விழுப்புரம்
33. குற்றாலம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
34. வேளாங்கன்னி ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்
35. முதல் சுதந்திரப் போரில் ஆண் வேடமிட்டு ஆங்கிலேயருடன் போரிட்டவர் - ஜான்சி ராணி
36. வேடந்தாங்கல் அமைந்துள்ள மாவட்டம் - காஞ்சிபுரம்
37. பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடிப்பது - கருஞ்சிட்டு
38. ஏழு சகோதரர்கள் என்று அழைக்கப்படுவது - தவிட்டுக் குருவி
39. சிறுமலை வாழைப் பழத்திற்குப் புகழ் பெற்ற மாவட்டம் - திண்டுக்கல்
40. பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது - மாமல்லபுரம்
41. மாமல்லபுரத்தை கட்டியவர்கள் - நரசிம்ம வர்மன்
42. மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் - குறிஞ்சி
43. காடும் காடு சார்ந்த பகுதியும் - முல்லை
44. வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் - மருதம்
45. கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் - நெய்தல்
46. மணலும் மணலைச் சார்ந்த பகுதியும் - பாலை
47. APPLE - Ariance Passenger Payland Experiment Research
48. EDUSAT - Educational Satellite
49. PSLV - Polar Satelite Launch Vehicle
50. GSLV - Geo synchronous satellite launch vehicle

நன்றி:

 
 

TET வினா விடை - சமூக அறிவியல் - பொது 8

1. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் - சோழர்கள்
2. குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு
3. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 7
4. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு - 1/3 பாகம்
5. மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை - 10 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
6. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
7. கிராம உள்ளாட்சியில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை - மூன்று
8. மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது - கிராம சபை
9. இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ள மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் - அந்தமான் நிக்கோபார் தீவுகள்
10. ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் - 5 ஆண்டுகள்
11. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 10
12. தனி அரசியல் அமைப்பு கொண்ட இந்திய மாநிலம் - ஜம்மு மற்றும் காஷ்மீர்
13. இந்தியாவின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை - 4052
14. மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் - பர்மா
15. இந்திய அரசியல் அமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - ஜவஹர்லால் நேரு
16. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - இராஜேந்திர பிரசாத்
17. இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராதாகிருஷ்ணன்
18. இந்தியாவின் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கமல்தேவி சட்டோபாத்தியா
19. இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆணடு - 1950
20. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1952
21. சார்க் என்பதன் விரிவாககம் - தெற்காசிய நாடுகளின் மண்டலக் கூட்டமைப்பு
22. கோட்டைகள் அதிகம் உள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா
23. கன்னிமாரா நூலகம் முதன் முதலில் துவக்கப்பட்ட இடம் - புனித ஜார்ஜ் கோட்டை
24. இந்தியாவின் முதல் நவீன நூலகம் - கன்னிமாரா நூலகம்
25. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் - 10.07.1806
26. வேலூர் கோட்டையை கட்டிய சிற்பி - பத்ரிகாசி இமாம்
27. இத்தாலியின் இராணுவக் கோட்டை வடிவமைப்பில் அமைந்துள்ள கோட்டை - வேலூர் கோட்டை
28. வேலூர் கோட்டையை கட்டியவர்- சின்ன பொம்மன் நாயக்கன்
29. இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை
30. புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயருக்கு இடம் அளித்தவர் - சென்னியப்ப நாயக்கர்
31. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் - சர் பிரான்சிஸ் டே
32. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639
33. வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006
34. தரங்கம்பாடி கோட்டையைக் கட்டியவர்கள்-டென்மார்க் நாட்டவர்
35. அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் - சீகன்பால்கு
36. தரங்கம்பாடி கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1620
37. புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் - சென்னை
38. சிங்கபுர நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி - செஞ்ஜி
39. போக்குவரத்து விதிகளில் சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது - செல்லாதே
40. போக்குவரத்து விதிகளில் நீலச் செவ்வகம் குறிப்பிடுவது - தகவல் சின்னங்கள்
41. கிழக்கின் ட்ராய் என்று அழைக்கப்பட்ட கோட்டை - செஞ்சிக் கோட்டை
42. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை தர வேண்டும் - 5
43. செஞ்சிக் கோட்டை அமைந்துள் மலை - கிருஷ்ணகிரி
44. தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்கள் - 32
45. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது - நீலகிரி மலை
46. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் - கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்
47. மேகாலயாவின் தலைநகரம் - ஷில்லாங்
48. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
49. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு - பக்ரா நங்கல்
50. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி

நன்றி:

பக்கத்துக்கு பக்கம் வண்ணமயமான முப்பருவ முறை பாட புத்தகங்கள்

பக்கத்துக்கு பக்கம், வண்ண நிறத்தில், மாணவர்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, முப்பருவ முறை பாடத் திட்ட புத்தகங்கள், ஜூன், 1ம் தேதி முதல், மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளன.

இந்த கல்வியாண்டு முதல், ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ முறை கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டப்படி, மூன்று பருவங்களுக்கான பாடத் திட்டங்களில், தற்போது, ஜூன் முதல், செப்., வரையிலான முதல் பருவப் பாட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு உள்ளன.

இப்புத்தகங்களில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். எட்டாம் வகுப்புக்கு, 180 பக்கங்கள் கொண்ட தமிழ், ஆங்கிலம் ஒரு புத்தகமாகவும், 300 பக்கங்கள் கொண்ட கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய, மூன்று பாடங்கள், ஒரு புத்தகமாகவும் பிரித்து, இரண்டு புத்தகங்களாக வழங்கப்பட்டுள்ளன. பக்கத்துக்கு பக்கம் கண்களையும், மாணவர்களை கவரும் வகையிலும் வண்ண நிறப் படங்கள், ஓவியங்கள், வரைபடங்கள் இடம் பெற்றுள்ளன. எழுத்துகளும் பெரிய அளவில் அச்சிடப்பட்டுள்ளன. பழைய திட்டத்தில் உள்ளது போல், மாணவர்கள் இனி, அனைத்து புத்தகங்களையும் சுமந்து செல்லத் தேவையில்லை. முன்பு போல் முழு ஆண்டு தேர்வுக்கு அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும் என்பதும் இந்த திட்டத்தில் இல்லை.

என்னென்ன மாற்றங்கள்? எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், "செம்மொழி மாநாட்டு சிறப்புகள்' என்ற பாடம் மாற்றப்பட்டு, "தமிழ் வளர்த்த சான்றோர்கள்' என்ற புதிய பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. செம்மொழி மாநாட்டு, திருவள்ளுவர் படத்துடன் கூடிய கடைசி அட்டை படம் மாற்றப்பட்டு, வண்ண நிறத்தில் அட்டை தயாரிக்கப்பட்டு உள்ளது.

நன்றி:

23.5.12

அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் - அரசாணை

ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

.

22.5.12

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

TET வினா விடை - தாள் II - கணிதம்

Paper II Maths

TET வினா விடை - கணிதம் - பொது 1

இயல் எண்கள் : Natural Numbers
1 ஐத் தொடக்க எண்ணாகக் கொண்ட எண்ணிலடங்காத, எண்ணும் எண்களுக்கு இயல் எண்கள் என்று பெயர்.
இயல் எண்களின் கணத்தை N என்ற எழுத்தால் குறிக்கப்படும்.
N = {1,2,3,4,5... } என்பது இயல் எண்களின் கணமாகும்.

முழு எண்கள் : Whole Numbers
0 வுடன் இயல் எண்களைச் சேர்க்கக் கிடைப்பது முழு எண்களாகும். அனைத்து முழு எண்களின் கணத்தை W என்ற எழுத்தால் குறிக்கப்படும்.
W  = {0,1,2,3,4,5... } என்பது முழு எண்களின் கணமாகும்.

முழுக்கள் :
முழு எண்கள் மற்றும் குறை எண்கள் சேர்ந்த தொகுப்பு முழுக்கள் என அழைக்கப்படும்.
முழுக்கள் என்பது Z என்ற எழுத்தால் குறிக்கப்படும்.
Z = {.... -2, -1, 0, 1, 2,... } என்பது முழுக்களின் கணமாகும்.

முழுக்களின் கூட்டல்
இரு முழுக்களைக் கூட்ட கிடைப்பது ஒரு முழு கூட்டல் ஆகும்.
முழுக் கூட்டலுக்கு உதாரணம்
8+4=12
6+0=6

முழுக்களின் கழித்தல்
ஒரு முழுவிலிருந்து மற்றொரு முழுவைக் கழிக்க இரண்டாவது முழுவின் கூட்டல் எதிர்மறையான முதல் எண்ணுடன் கூட்ட கிடைப்பது
உதாரணம்
(-8) - (-5) = (-8) - (-5) = - 13
6+(-2) = 6+(-2) ன் எதிர்மறை = 6+2=8

முழுக்களின் பெருக்கல்
முழு எண்களின் கணத்தில் பெருக்கலானது தொடர் கூட்டலாகும். (1) (-15) x3 = -(15x3) =-5
தொலைக்காட்சிப் பெட்டியின் விலை ரூ.2400. 40 தொலைக்காட்சி பெட்டியின் விலை என்ன?
2400x40 = 96000

பூஜ்ஜியப் பெருக்கல் :
பூஜ்ஜியமில்லாத ஏதேனும் ஒரு எண்ணை பூஜ்ஜியத்தால் பெருக்கக் கிடைப்பதுதான் பூஜ்ஜியமாகும்.
5x0=0

பின்னங்களின் கூட்டல் மற்றும் கழித்தல்
சுருக்குக 2/3 + 3/5
2/5 + 3/5 = 2+3/5 = 5/5 = 1
கண்டுபிடி
(2/3) / (-5/10) = 2/3 / (-1/2)
= 2/3x(-2) = -4/3
மிகை முழுக்கள் = 1, 2, 3, 4, 5, 6..
குறை முழுக்கள் = -1, -2, -3, -4, -5, -6..
எல்லாக் குறையற்ற முழு எண்களையும் பெருக்கலாம், கூட்டலாம்.
பூஜ்ஜியத்தை தவிர எல்லாக் குறையற்ற முழு எண்களுக்கும் முன்னி உண்டு.
ஒரு எண் 2 ஆல் முழுவதுமாக வகுக்கப்பட்டால் அந்த எண் இரட்டை எண்.
2, 4, 6, 8, 0ல் முடிவுறும் எண்கள் இரட்டை எண்கள்
1, 3, 5, 7, 9,ல் முடிவுறும் எண்கள் ஒற்றை எண்கள்
பகு எண் - 2க்கும் மேற்பட்ட எண்களால் வகுக்கப்படும் எண் பகு எண். 4, 6, 8
பகா எண் - 1, 2,க்கு மேற்பட்ட எண்களால் வகுக்கப்பட முடியாத எண்கள் பகா எண். 3, 5, 7, 11
1 மற்றும் அந்த எண்ணால் மட்டுமே வகுக்கப்படும் எண்கள் பகா எண்கள் ஆகும். மற்ற எண்கள் பகு எண்கள் ஆகும்.
1 என்பது பகு எண்ணும் அல்ல பகா எண்ணும் அல்ல. 1 இயல் எண் ஆகும்.
1க்கும் 100க்கும் இடையே உள்ள பகா எண்கள் பின்வருமாறு
2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 41, 43, 47, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97
121 பகு எண்ணா? பகா எண்ணா?
121 ஐ 11 வகுக்கிறது. எனவே 121 பகா எண் அல்ல. 121 ஓர் பகு எண் ஆகும்.
11க்கு கீழ் உள்ள பகா எண்கள்
2, 3, 5, 7, 11
வாழ்வியல் கணிதம்
120 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில், ஒவ்வொரு பக்கத்திலும் 45 வரிகள் உள்ளன. ஒரு பக்கத்திற்கு 24 வரிகள் மட்டும் இருந்தால் புத்தகத்தில் 225 பக்கங்கள் இருக்கும்.
ஒரு பணியாளர் ரூ.11,2520 ஐ ஊக்கத் தொகையாக பெறுகிறான். இது அவரின் ஆண்டு வருமானத்தில் 15% எனில் அவரது மாத வருமானம் ரூ.6250

250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 பேர் கால்பந்தையும், 63 பேர் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள் எனில், கூடைப்பந்து மற்றும் எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 250
கூடைப் பந்து             = 55
இதனை 55/250 எனக் குறிப்பிடலாம். 55/250x100=22%
எறிபந்து = 63
63/250  எனக் குறிப்பிடலாம்
63/250x100=25.2%

கொடுக்கப்பட்ட n எண்களில் (n>1) ஒரு எண் 1-1/n மற்ற எண்கள் அனைத்தும் ஒன்றுகள் எனில் n எண்களின் சராசரி 1-1/n2

சார்பகா எண்ணுக்கு ஒரு உதாரணம் - (3,5)

2005ல் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,50,000 அடுத்த ஆண்டில் அது 10% அதிகரிக்கும் என்றால் 2006ல் என்னவாக இருக்கும்.
2005ல் - 1,50,000
அதிகரிப்பது = 10/100x150000 = 15,000
2006ல் மக்கள் தொகை = 1,50,000 + 15000 = 1,65,000

விகித முறை எண்கள் : Q = [2,-3,-7...]

விகித முறை எண்களை Q என்ற எழுத்தால் குறிக்கலாம்.

எல்லா முழுக்களும் விகிதமுறு எண்களாகும்.

விகிதமுறு எண்கள் P/Q வடிவில் இருக்கும்.

விகிதமுறா எண்கள் P/Q வடிவில்தான் இருக்கும். முடிந்துவிடாத புள்ளி வைத்த எண்களைக் கொண்டிருக்கும்.

மெய் எண்கள் R என்ற எழுத்தால் குறிக்கலாம்.

இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள், விகிதமுறு, விகிதமுறா எண்கள் ஆகியவற்றின் தொகுப்பே மெய் எண்களாகும்.

சிக்கல் எண்கள் - இதனை C என்ற எழுத்தால் குறிக்கலாம்.
C= {z=x+1y/x, YEr, i= -1] இந்த வடிவில் உள்ள எண்கள் சிக்கல் எண்கள் எனப்படும்.

 500 செ.மீ. + 50 மீ + 5 கி.மீ. = 5055 மீ.

11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் என்றால் லாபம் அல்லது நட்டம் 10% ஆக இருக்கும்.

ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6. இந்த எண்ணில் இருந்து 18 ஐக் கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண் என்ன
ஈரிலக்க எண் 42 (4+2=6)
42 - 18 =  24
இடம் மாறினால் - 42 விடை = 42

தள்ளுபடி என்பது குறித்த விலை மீதான உள்ள விலை

விற்பனை விலை = குறித்த விலை  - தள்ளுபடி
.

STFI மாநாடு: பேரணி & பொதுக்கூட்டம் - படங்கள்

STFI மாநாடு: புதிய தலைவர்கள் & தேசிய கல்வி கருத்தரங்கம் - படங்கள்


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்