தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.2.13

அரசு உதவி பெறும் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் உபரி என அறிவித்துள்ளதை ரத்து செய்ய கோரிக்கை


கன்னியாகுமரி மாவட்டம் அரசு உதவி பெறும் உயர், மேல் நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பணியிட நிர்ணய ஆணை களில் இடைநிலை ஆசிரியர்கள் உபரி என அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வலி யுறுத்தி முதன்மை கல்வி அலுவலரை சந் தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தஇஆச கன்னியாகுமரி மாவட்டக் கிளை சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

அரசு உதவி பெறும் உயர், மேல் நிலைப் பள்ளிகளுக்கு 2012 & 13ஆம் கல்வியாண் டுக்கான பணியிட நிர்ணய ஆணை வழங் கப்பட்டுள்ளது. அதில் அரசு விதிகளுக்கு மாறாக இடைநிலை ஆசிரியர் பணியிடங் கள் உபரி என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் - 2009 மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க விதிகளை பின்பற்றாமல் பணி நிர்ணய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

6, 7, 8 வகுப்பு மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் களின் தேவையை கருத்தில் கொள்ளாமல் உபரி என அறிவிக்கப்பட்டிருப்பது இடை நிலை ஆசிரியர் பணித் தொகுதிக்கு பெருத்த இழப்பாக உள்ளது.

6 முதல் 10 வகுப்புகள் வரை ஒரே அலகா கக் கொண்டு பணியிட நிர்ணயம் செய்யப் படுகிறது.அவ்வாறு பணியிட நிர்ணயம் செய்யும்போது பணிமூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்காமையால் இடைநிலை ஆசிரியர்கள் உபரி என வரையறுக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நிய மனம் நடைபெறாத நிலையில் முடிவுறு பணித் தொகுதியாக மாறிவிட்ட இடை நிலை ஆசிரியர்களை உபரி என அறிவித் திருப்பதை ரத்து செய்திட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ், மாவட்ட தலைவர் ஹெர்பர்ட் ராஜாசிங், துணைத் தலைவர் டெல்லஸ், தலைமையிடச் செய லாளர் பால் செபாஸ்டின், நாகர்கோவில் கல்வி மாவட்டச் செயலாளர் சசி, பொருளா ளர் ஞான செல்வ திரவியம், தக்கலை கல்வி மாவட்ட இணைச் செயலாளர் ராஜகுமார், டோமினிக் சாவியோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக மாநில அமைப்பு சார் பில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர்(இடைநிலைக் கல்வி) திருமதி. இராஜ இரா ஜேஸ்வரி அவர்களை சந்தித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இணை இயக்குநர் உபரி மாறுதல் நடைபெறாது எனக் கூறி யுள்ளார். எனவே உதவிபெறும் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சத் தேவை யில்லை. தொடர்ந்து மாநில அமைப்பு இதனை கண்காணித்து வருகிறது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்