தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.2.13

பிப். 20, 21 பொது வேலை நிறுத்தம்: இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்க முடிவு

தமிழ்நாட்டில் பிப். 20, 21 பொது வேலை நிறுத்தத்தில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற் பார்கள் என்று இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக் கூட்டம் சென்னையில் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.விஜய குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் தமிழ்நாட்டில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் ஆசிரியர் களைப் பங்கேற்கச் செய்வது என்றும், வேலை நிறுத்த நாட்களில் அரசு ஊழியர் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்தும் இயக்க நடவடிக்கைகளில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மே மாத இறுதியில் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாட்டில் உள்ள சங் கங்களின் விரிவான கூட்டத்தைக் கூட்டி மாவட்ட அளவில் கூட்டமைப்பை பலப் படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் டி. கண்ணன், தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அ.மாயவன், எஸ்.பக்தவச்சலம், தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கயத்தாறு, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் கே.பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்