தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.11.10

மேலவை: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

மேலவைத் தேர்தலில் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது. 

டிசம்பர் 6-ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், பெயர்கள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும். பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருப்பவர்கள் தங்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.

எங்கெங்கு வைக்கப்படும்: மேலவைத் தேர்தலில் பட்டதாரி தொகுதிகளில் வாக்களிக்க 3 லட்சத்து 11 ஆயிரத்து 681 பேரும், ஆசிரியர் தொகுதிகளில் வாக்களிக்க 72 ஆயிரம் பேரும் தங்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இந்த மனுக்களை அடிப்படையாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் சென்னையில் மாநகராட்சி அலுவலகம், அதன் மண்டல அலுவலகங்கள், மாவட்டங்களில் தாலுகா அலுவலகங்களில் ஒட்டப்பட்டு இருக்கும்.

இறுதி பட்டியல்: டிசம்பர் 6-ம் தேதிக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தொடங்கும். டிசம்பர் 29-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதிப் பட்டியல் வெளியானால் மேலவைத் தேர்தலுக்கு தமிழகம் தயாரானதாக அர்த்தம். ஏனென்றால், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு இறுதியாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 78 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும்.உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தொகுதிகள் 26 ஆகும். ஆளுநர் 12 பேரை நியமனம் செய்வார். ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தலா ஏழு தொகுதிகளுக்கு (மொத்தம் 14) வாக்களிப்பர். எம்.எல்.ஏ.க்கள் மூலம் 26 பேரும் தேர்வு செய்யப்படுவர்.

நன்றி: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்