தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.11.10

ஆர்வமிக்க பட்டதாரி-ஆசிரியர் தொகுதிகள் எவை? தேர்தல் ஆணையம் தகவல்

மேலவைத் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமிக்க பட்டதாரிகள்-ஆசிரியர்கள் எந்தத் தொகுதியில் உள்ளனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக 48,741 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேற்கு பட்டதாரி தொகுதியைச் சேர்ந்தவர்கள் குறைந்த அளவுக்கே தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

மேலவைத் தேர்தலுக்கான பணிகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநிலத்திலுள்ள மாவட்டங்கள் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது. நவம்பர் 22-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்பின், டிசம்பர் 6-ம் தேதி வரை வரைவு பட்டியலில் திருத்தங்கள், சேர்ப்பு போன்ற பணிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்படும்.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்கிற விவரத்தை தொகுதி வாரியாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை பட்டதாரி தொகுதியில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்) 47,880 பேரும், வடக்கு தொகுதியில் (வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை) 43,958 பேரும், வடக்கு மத்திய தொகுதியில் (விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர்) 48,168 பேரும், மேற்கு தொகுதியில் (ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர்) 32,031 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.கிழக்கு மத்திய தொகுதியில் (திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை) 43,836 பேரும், தெற்கு மத்திய தொகுதியில் (திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம்) 48,741 பேரும், தெற்கு தொகுதியில் (தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி) 47,067 பேரும் மனு செய்துள்ளனர். மொத்தமாக, 3 லட்சத்து 11,681 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆசிரியர் தொகுதி: பட்டதாரி தொகுதிகளுடன் ஒப்பிடும் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மிகக் குறைவான ஆசிரியர்களே விண்ணப்பம் செய்துள்ளனர். சென்னை தொகுதியில் 10,582 பேரும், வடக்கு தொகுதியில் 14,651 பேரும், வடக்கு மத்திய தொகுதியில் 9,938 பேரும், மேற்கு தொகுதியில் 6,935 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.கிழக்கு மத்திய தொகுதியில் 8,603 பேரும், மத்திய தெற்கு தொகுதியில் 7,927 பேரும், தெற்கு தொகுதியில் 13,441 பேரும் மனு செய்துள்ளனர். ஆசிரியர் தொகுதிகளில் வாக்களிக்க மொத்தமாக 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர் தொகுதிகளைப் பொறுத்தவரையில் வடக்கு தொகுதியில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

நன்றி: 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்