தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.12.09

கூட்டமைப்புடன் பள்ளிக் கல்வித்துறை பேச்சு நடத்தியது

இடைநிலை, பட்டதாரி, தமிழாசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர், தலைமை ஆசிரியர்களைக் கொண்ட "இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பினர்" அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் பறிப்பு, கல்வி அலுவலர் பதவி உயர்வு சதவீதம் குறைப்பு, இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துதல், தொகுப்பாசிரியர்களுக்கு பணிவரன் முறை என பத்து கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில் சில சலுகை பறிப்புகள் முதுகலை ஆசிரியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என தெரிவித்தனர். இதற்காக சென்னையில் பேரணி, ஒரு லட்சம் கடிதம் அனுப்புதல் என, நடவடிக்கையில் ஈடுபட்டனர். தங்களை அரசு அழைத்துப் பேச வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், இந்த ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள், கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு குறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்தது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில் ஆசிரியர் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில செயலர் சாமிசத்தியமூர்த்தி, பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் தம்பித்துரை, தமிழாசிரியர் கழகத்தின் ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் சங்கரபெருமாள், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடத்தை ரத்து செய்த உத்தரவை ஓரிரு நாளில் ரத்து செய்து அறிவிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். பதவி உயர்வு சதவீதம், பணிவரன் முறை உட்பட பிற கோரிக்கைகள் குறித்து அமைச்சர் அளவில் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என ஆலோசனை தெரிவித்தனர்.

கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், "ஏற்கனவே தெரிவித்த கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து பதில் தருவதாக தெரிவித்துள்ளனர். திருப்தி அளிக்காவிட்டால் அறிவித்தபடி போராட்டங்கள் நடக்கும்" என்றனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்