தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.12.09

இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துக.

தமிழகம் முழுவதும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தக் கோரி ஆறு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பள்ளி கல்வித்துறை எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசு, தனியார் உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்தவர்கள் 2003ம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரியர்களாக 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2003க்கு பின் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் இல்லை. உயர், மேல்நிலைப்பள்ளிகளில் கல்வியியலில் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்கள் இப்போதும் பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.

உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி இடத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருவதால் இடை நிலை ஆசிரியர்கள் சதவீதம் குறைந்து வருகிறது. இவர்களுக்கு பதவி உயர்வு விகிதம் குறைவாக தரப்படுகிறது. ஒரே பணி செய்யும் ஆசிரியர்களுக்கு அரசு இரு வேறு ஊதியவிகிதத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது.

முன்பு செகண்டரி கிரேடு ஆசிரியர்களுக்கு கீழ், ஜூனியர் கிரேடு ஆசிரியர்களாக அரசு கொண்டு வந்த போது ஜூனியர் கிரேடு ஆசிரியர்களை இரண்டு மாத சிறப்பு பயிற்சி வழங்கி செகண்டரி கிரேடு ஆசிரியர்களாக ஏற்றுக்கொண்டது. முதல் நிலை தமிழாசிரியர்கள், இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் என கொண்டு வந்தது. இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் முதல் நிலை தமிழாசிரியர்களாக பள்ளிக்கல்வித்துறை தரம் உயர்த்தியது. மேல்நிலை பள்ளிகள் துவக்கியபோது மேல்நிலை கல்வி கற்பிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை, மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி அவர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்தியது.

இதுபோன்று உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தக் கோரி ஆறு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பள்ளிக்கல்வித்துறை கண்டு கொள்ளவில்லை. இதுவரை பதவி உயர்வு, ஆறாவது சம்பளக்கமிஷன் பரிந்துரை என அனைத்து நிலையிலும் இடைநிலை ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை இவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்த முன் வர வேண்டும்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்