தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.7.16

தரமான கல்விக்கு முக்கியத்துவம்: ஜாவடேக்கர் உறுதி

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பிரகாஷ் ஜாவடேக்கர், தரமான கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறினார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சராக இருந்த இவர், நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, கேபினட் அமைச்சராக மாற்றப்பட்டார். அவருக்கு, ஸ்மிருதி இரானியிடமிருந்த மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது.

நேற்று அவர் ஸ்மிருதி இரானியை சந்தித்து பேசினார். இன்று தனது அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக, தனது பணியில்அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கல்வியின் தரத்தை அதிகரிப்பதில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனக்கூறினார். மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, கொள்கை முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும். இன்று தான் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் ஸ்மிருதி வராததற்கு, அவரது குடும்ப விவகாரம் தான் காரணம் என்றார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்