வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வைத்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 02-02-2014 ஞாயிறு அன்று நடைபெற்றது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் கயத்தாறு தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர்கள் பக்கியராஜ், நவநீதசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் இளங்கோ வரவேற்றார். பொது செயலாளர் இசக்கியப்பன், பொருளாளர் மதலைமுத்து, துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ், மாநில செயலாளர் ஜெயராணி, மாநில இணைச் செயலாளர் அப்பாத்துரை உட்பட அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 25 ஆயிரத்து 500 இடைநிலை ஆசிரியர்களை 01-06-2006க்கு முன் இருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்த்திட வேண்டும். தற்போது பின்பற்றப்படும் ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக