தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத் தின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை ஜாண்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ராஜமார்த்தாண்டம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கு.கு. சரவணன், மாவட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் மாவட்ட அமைப்புச் செயலாளர் செல்வின், தென் காசி கல்வி மாவட்டத் தலைவர் சசிக் குமார், செயலாளர் செல்வ சுந்தரராஜ், திரு நெல்வேலி கல்வி மாவட்டச் செயலாளர் சாம்ராஜ் மற்றும் ராஜா, மாநிலத் தணிக்கையாளர் பாபு உள்பட பலர் உரையாற்றினர்.
மேனாள் மாவட்டச் செயலாளர் மாடக்கண்ணு, மேனாள் மாவட்டத் தலைவர் J.D. நிம்ரோத் ஆகியோர் 216 அரசாணை பற்றிய விபரங்கள், வழக்கு தொடர்பான விபரங்கள் பற்றி எடுத்துரைத்தனர். மாநில பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் மாநில செயல்பாடுகள் குறித்து விளக்கினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் செல்வின் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்:
1. உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை மே 10 பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின் போது பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட வலியுறுத்தப் பட்டது.
2. கோடை வெப்ப தாக்குதல் அதிகமாகி வருவதால் மாணவர்கள் நலன் கருதி அனைத்து வகை பள்ளிகளின் வேலை நாள்களை மார்ச் 31க்குள் முடிக்கும் அளவில் பள்ளி நாள்காட்டி தயார் செய்து கேரள மாநிலம் போல் ஏப்ரல் 1 முதல் கோடை விடுமுறை வழங்கிட மாண்புமிகு முதல்வர் அவர்களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. மே 12, 13 மாநில பயிற்சி பட்டறை யில் நெல்லை மாவட்டத்தின் மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
4. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் நடைபெற தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
5. CPFஐ ரத்து செய்து GPFஐ அமல்படுத் திட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
6. மருத்துவ காப்பீட்டு சந்தா தொகை யை ரூ.150லிருந்து ரூ.50 ஆக குறைத்திடு தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக