தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரு. அ .சங்கர், மாநில துணைத்தலைவர் தலைமையில் தாங்கினார்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பிரதான கோரிக்கையான உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலையாசிரியர்களை பட்டதாரியாசிரியர்களாக உட்படுத்து என்ற கோரிக்கை முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை திரு.அ.பாலகுருநாதன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து மாவட்டச் செயலர் திரு.அ.செல்லத்துரை விளக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் திருவாளர்கள். நாகராஜ், முத்துக்குமார், திருமதி.க.அமுதா ஆகியோர் பேசினார்கள். தோழமைச்சங்க நிர்வாகிகள் திரு. இளங்கோ, மாநில இணைசெயலர், தமிழாசிரியர் கழகம், திரு.முத்துச்சாமி, மாவட்ட செயலர், உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், திரு.ஆ.சேவியர் ஆரோக்கி தாஸ், மாநில பொது செயலர், ஆங்கில பட்டதாரி சங்கம், திரு.குமரேசன், வட்டார செயலர், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
ஆர்ப்பாட்ட முடிவில் திரு.கண்ணன் வட்டார தலைவர் நன்றி கூறினார்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக