தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.12.12

கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் : புத்தாண்டில் வருகிறது அறிவிப்பு

பள்ளி கல்வித் துறையில், இயக்குனர் நிலையில், ஏற்கனவே ஒரு பணியிடம் காலியாக உள்ள நிலையில், இம்மாத இறுதியில், மேலும் ஒரு பணியிடம் காலியாகிறது. இதனால், புத்தாண்டு பிறந்ததும், அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த மணி, ஓய்வு பெற்றதும், ஆசிரியர் கல்வி இயக்குனராக இருந்த தேவராஜன், பள்ளிக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். மத்திய இடைநிலைக் கல்வி திட்ட கூடுதல் இயக்குனர் இளங்கோவன், ஆசிரியர் கல்வி இயக்குனர் பொறுப்பை, கூடுதலாக கவனித்து வருகிறார். பொது நூலகத்துறை இயக்குனர் பணியிடமும், காலியாக உள்ளது. இதை, தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், கூடுதலாக கவனித்து வருகிறார்.

நூலகத் துறையில் அனுபவம் வாய்ந்த வரை, நூலகத் துறை இயக்குனராக நியமிக்க வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதிய இயக்குனர் நியமிக் கப்படும் வரை, கூடுதல் பொறுப்பு நிலையே தொடரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், மெட்ரிக் பள்ளி இயக்குனர்
செந்தமிழ்ச் செல்வி, இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதனால், அதிகாரிகள் மட்டத்தில், விரைவில் மாற்றங்கள் வரும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வுத்துறை இணை இயக்குனர் தங்கமாரி மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர். இவர்களின் பதவி உயர்வால், இரண்டு இணை இயக்குனர் பணியிடங்கள் காலி ஏற்படும். நூலகத்துறையில், ஒரு இணை இயக்குனர் பணியிடம், ஏற்கனவே காலியாக உள்ளது. இந்தப் பதவியை, கண்ணப்பன், கூடுதலாக கவனித்து வருகிறார். எனவே, பணிமூப்பு பட்டியலில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூன்று பேர், இணை இயக்குனர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர்.

 இந்த மாற்றங்கள் அனைத்தும், புத்தாண்டு பிறந்ததும் நடவடிக்கைக்கு வரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்