தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.1.11

29 கேள்விகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு


ந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது. 29 கேள்விகள் அடங்கிய பட்டியலுடன் கணக்கெடுப்பு  நடத்தப்படுகிறது. ஊழியர்கள் கணக்கெடுக்க வரும்போது வீட்டில் யாரும் இல்லாவிட்டாலும்கூட தொலைபேசி மூலம், எப்போது வீட்டில் இருப்போம் என தெரியப்படுத்தலாம். அந்த நேரத்தில் கணக்கெடுப்புப் பணியாளர்கள் வந்து விவரம் சேகரிப்பார்கள்.  

இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி  1952-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2001-ம் ஆண்டில் நடத்தப்பட்ட பிறகு, இப்போது 2011-ம் ஆண்டு கணக்கெடுக்கும் பணிகள் பிப்ரவரி 9-ல் தொடங்குகின்றன.  

1.5 லட்சம் பணியாளர்கள்: தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் 1.5 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு பகுதி பகுதியாக பயிற்சிகள் அளிக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.   பிப்ரவரி 9 முதல் 28-ம் தேதி வரை அவர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்வர். காலை அல்லது மாலை ஏதாவது ஒரு வேளையைத் தேர்ந்தெடுத்து கணக்கெடுக்கும் பணியைச் செய்யவுள்ளனர்.   

மொத்தம் 29 கேள்விகள்: மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வீட்டில்  உள்ளவர்களிடம் 29 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான வினாக்களை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தயாரித்துள்ளது.  ஒரே வகையான வினாக்கள் அனைத்து மாநில மொழிகளிலும் அச்சடிடப்பட்டுள்ளன. முதலில், நபரின் பெயர் (குடும்பத் தலைவரில் இருந்து தொடங்கும்), குடும்பத் தலைவருக்கு உறவு முறை, இனம், பிறந்த தேதி மற்றும் வயது, தற்போதைய திருமண நிலை, திருமணத்தின் போது வயது, மதம், தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா?, மாற்றுத் திறனாளியா?, தாய்மொழி, அறிந்த பிற மொழிகள், எழுத்தறிவு நிலை, கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை, அதிக பட்ச கல்வி நிலை, கடந்த ஆண்டில் எப்போதாவது பணி செய்தவரா?, பொருளாதார நடவடிக்கையின் வகை, நபரின் தொழில், வியாபாரம் அல்லது சேவையின் தன்மை, வேலை செய்பவரின் வகை, பொருளீட்டா நடவடிக்கை, வேலை தேடுபவரா அல்லது வேலை செய்யத் தயாரா?, பணி செய்யும் இடத்துக்கு பயணம், கிராமத்துக்கு அல்லது நகரத்துக்கு வெளியே பிறந்தவர்களின் பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், இடப்பெயர்ச்சிக்கான காரணங்கள், இடப்பெயர்ச்சிக்குப் பின் வசித்து வரும் காலம், உயிருடன் வாழும் குழந்தைகள், உயிருடன் பிறந்த குழந்தைகள், கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆகிய 29 கேள்விகள் அடங்கிய பட்டியலுடன் அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வருவார்கள்.  கல்வி நிலை குறித்து கேள்விகள் கேட்கப்படுவதால் எத்தனை பேர் எழுத்தறிவு பெற்றவர்கள், பள்ளி மற்றும் உயர் கல்வியைப் பயின்றவர்கள் எத்தனை பேர் என்கிற விவரங்கள் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிய வரும்.  

வீட்டில் ஆள் இல்லாவிட்டால்...: சென்னை போன்ற நகரங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். வீட்டில் ஆள் இல்லாத போது கணக்கெடுப்பு அதிகாரிகள் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் இலவச தொலைபேசி எண்ணை  (1800 110 111) தொடர்பு கொள்ளலாம். மேலும், 94456 00992 மற்றும் 94456 38279 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு வீட்டில் எப்போது இருப்போம் என்கிற தகவலைத் தெரிவிக்கலாம்.

நன்றி: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்