நாகர்கோவில் அருகே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸôர் கைது செய்தனர்.
நாகர்கோவிலை அடுத்த பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்போன்சம்மாள் (47). அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தெங்கம்புதூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பொட்டல்விளை பகுதியில் மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார். வியாழக்கிழமை மாலையில், பொட்டல்விளையிலுள்ள வி. வேலப்பன் (32) என்பவரின் வீட்டுக்குச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களைக் கேட்டு உரிய படிவத்தில் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் வேலப்பன், அவரது தாய் கமலம், அண்ணன் முருகன் ஆகியோர் இருந்தனர். இரணியலைச் சேர்ந்த இவர்கள் பொட்டல்விளையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களிடம் அல்போன்சம்மாள் பல்வேறு விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று ஆத்திரமடைந்த வேலப்பன் அவரைத் தாக்கினார். இதில் நிலை குலைந்து அல்போன்சம்மாள் கீழே விழுந்தார். அவர் வைத்திருந்த ஆவணங்களும் சிதறி விழுந்தன.
இது தொடர்பாக, சுசீந்திரம் போலீஸில் அல்போன்சம்மாள் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸôர் வழக்குப் பதிந்து வேலப்பனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக