இடம்: மாவட்டத் தலைநகரங்கள்
நாள் 20.03.2015, வெள்ளிக் கிழமை நேரம் மாலை:-5.00 மணி
அன்புடையீர்!
வணக்கம்.
மேற்கு வங்கத்தில் கடந்த 14.05.2011 அன்று சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுகள் வெளியான நாளில் இருந்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
• மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் பள்ளியின் முன்பாக ஆசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
• காட்டுமிராண்டித்தனமான முறையில் தந்தை முன் மகளையும், கணவனின் முன் மனைவியையும் வன்புண்ர்வு செய்துள்ளனர். பாதிக்கப்பபட்டவர்கள் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யக்கூட அனுமதிக்கப்படவில்லை.
• பல இடங்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளனர்.
• பல ஆசிரியர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
• பல ஆசிரியர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு குறைந்த விலைக்கு திரிணாமுல் ஆதரவு ஆசிரியர்களாலும் திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள்களாலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
• தேர்தலுக்கு முன்பு 31 ஆசிரியர்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டார்கள். அம்மாவோயிஸ்டுகள் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர்.
• பள்ளிகளில் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸார் குறிப்பிட்ட அளவில் கமிசன் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.
• முன்னுரிமைப்படி பதவி உயர்விற்காக காத்திருக்கம் ஆசிரியர்களை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் பதவி உயர்வு வேண்டாம் என எழுதித்தருமாறு மிரட்டப்படுகின்றனர்.
• திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு பிரிவினர் பள்ளிக்கூடங்களுககும், வீடுகளுக்கும் வந்து தங்கள் சங்கத்தில் சேர்ந்திட வேண்டும் என மிரட்டி கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
• சில ஆசிரியர்களின் வீடுகள் தீ வைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது. சிலரின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
• பலர் மீது பொய் வழக்குகள் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றார்.
• பல ஆசிரியர்கள் வீடுகளிலிருந்தும், பள்ளிகளிலிருந்தும் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
• பெண் ஆசிரியர்களும், சிறுபான்மை இனத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களும் தாக்கப்பட்டள்ளனர்.
• காவல்துறை மற்றும் அரசு நிர்வாகமும் கண்டு கொள்ளததால் இரு ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.
• ஆசிரியர் சங்கங்களின் அலுவலகங்கள் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மாநிலத்தின் அனைத்து விதமான ஜனநாயக நெறிமுறைகளும், மனித உரிமைகளும் மீறப்பட்டு வருகிறது. தங்கள் மீது ஏவப்பட்டுள்ள அனைத்து அடக்குமுறைகளையும் அட்டூழியங்களையும் ஆசிரியர்கள் வீரத்துடன் எதிர்த்து நின்று போராடி வருகின்றனர்.
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் இணைந்துள்ள மேற்கு வங்க ஆசிரிய அமைப்புக்கள் (ஹஞகூஹ, ஹக்ஷஞகூஹ) 1985, 1988, 2003 ஆகிய ஆண்டுகளில் நாம் போராட்டக்களத்தில் நின்ற போது தோழமை ஆதரவும். 2003 போராட்டத்தில் பணிநீக்கத்தில் இருந்த ஆசிரியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக 10 இலட்சம் வழங்கியதையும் நன்றியுடன்
நினைவு கூற வேண்டிய தருணம் இது என்பதை நாம் உணர வேண்டும்.
மேற்கு வங்கத்தில் மினி (மிசா) காலம் போல் உள்ளதை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளை கண்டித்தும், அவர்களின் மனித மாண்புகள் மற்றும் ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் விதத்தில் ஒற்றுமையையும், வலிமையையும் மீளவும் பெற்றிட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 6வது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திட முடிவு செய்துள்ளதை நிறைவேற்றும் விதமாக மாவட்ட அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு ஆசிரியப் பேரினமே அணிதிரள்வீர்.
இவண்:-
• தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
• தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்
• தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
• தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்
• பாண்டிச்சேரி ஆசிரியர் சங்கம்
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக