இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
10.11.10
மேலவை தேர்தல் வாக்காளர்களாக 72 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்
மேலவை தேர்தல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க, மூன்று லட்சத்து 13 ஆயிரத்து 861 பட்டதாரிகளும், 72 ஆயிரம் ஆசிரியர்களும் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான தேர்தலில், பட்டதாரி தொகுதிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த மாதம் முதல் தேதி துவங்கியது. இதற்கான விண்ணப்பங்கள், கடந்த 6ம் தேதி வரை பெறப்பட்டன. விண்ணப்பங்களை பெற கடைசி நாளான 6ம் தேதி வரை, பட்டதாரிகள் தொகுதிக்கு மூன்று லட்சத்து 13 ஆயிரத்து 861 பேரும், ஆசிரியர்கள் தொகுதிக்கு 72 ஆயிரத்து 77 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக