இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
17.9.10
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படி 45 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் 88 லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். அரசுக்கு இதனால் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.9 ஆயிரத்துக்கு 300 கோடி செலவாகும் என மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
புதிய அகவிலைப்படி 2010 ஜூலை 1-ம் தேதியிட்டு வழங்கப்படும். ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக