8.5.12

குமரி மாவட்ட இடைநிலை ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க குமரி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் தக்கலையில் நடந்தது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட தலைவர் சேம் பிரின்ஸ்குமார், செயலாளர் பாஸி ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாக செயல்பட்டனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க குமரி மாவட்ட தலைவராக ஹெர்பர்ட் ராஜாசிங், மாவட்ட செயலாளராக எட்வின் பிரகாஷ், மாவட்ட பொருளாளராக செல்வராஜ், அமைப்பு செயலாளராக திவாகரன் பிள்ளை, தலைமையிட செயலாளராக பால் செபாஸ்டின், துணை தலைவராக டெல்லஸ், இணை செயலாளராக கிறிஸ்டல் ஜார்ஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் கல்வி மாவட்ட தலைவராக சேம் ஐசக், செயலாளராக சசி, பொருளாளராக ஞான செல்வ திரவியம், துணை தலைவராக சிவகுமார், இணை செயலாளராக மதன்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தக்கலை கல்வி மாவட்ட தலைவராக சேவியர், செயலாளராக பாலசந்திரன், பொருளாளராக செல்லப்பன், துணை தலைவராக ஆபிரகாம், இணை செயலாளராக ராஜகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

குழித்துறை கல்வி மாவட்ட தலைவராக ஜெயச்சந்திரன், செயலாளராக ஹரிகுமார், பொருளாளராக செல்லன், துணை தலைவராக ஷெர்லின், இணை செயலாளராக ஹென்றிலால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக