சட்ட மேலவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிசம்பர் 16-ம் தேதி கடைசி நாளாகும்.
முன்னதாக, டிசம்பர் 17-ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் "மொஹரம்' பண்டிகைக்காக பொது விடுமுறை விடப்படுகிறது. இதன் காரணமாக டிசம்பர் 16-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் தகுதியுள்ள பட்டதாரிகள், ஆசிரியர்கள் முறையே படிவம் 18 அல்லது படிவம் 19-ல் விண்ணப்பிக்கலாம்.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக