இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
24.10.10
ஆசிரியர் பயிற்சி பட்டயம் இனி, "தொடக்க கல்வி பட்டய சான்று" என அழைக்கப்படும்.
ஆசிரியர் பயிற்சி பட்டயத்தை இனி, "தொடக்க கல்வி பட்டய சான்று" என குறிப்பிடுமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஏராளமான தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பட்டய சான்று பெற்றவர்கள் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். தற்போது, இவர்கள் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அதற்கு மேல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
வரும் கல்வி ஆண்டு முதல், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிப்போருக்கு "தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்று" என குறிப்பிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக