மத்திய அரசு உறுதி அளிக்காத வரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.), பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ரூ. 5 லட்சம் கோடி நிதி உள்ளது. இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.
ஸ்திரமற்ற பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதனால் ஏற்படும் நஷ்டத்தை அப்பாவித் தொழிலாளர்கள் மீது சுமத்தக் கூடாது என அரசின் முடிவை கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்க்கின்றன.
பங்குச் சந்தை முதலீடுகளுக்கு உறுதியான வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது. இதில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசு உத்தரவாதம் அளிக்காவிட்டால் பங்குச் சந்தை முதலீட்டுக்கு அனுமதிக்க முடியாது என்று தொழிலாளர் நலத்துறைச் செயலர் பி.சி. சதுர்வேதி, நிதிச் செயலர் அசோக் சாவ்லாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிஎப் நிதியை நிர்வகிக்கும் அமைப்பாக மத்திய அறங்காவலர் வாரியம் (சிபிடி) உள்ளது. இதன் தலைவராக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உள்ளார். இவரது தலைமையில் கடந்த மாதம் 15-ம் தேதி கூட்டம் நடைபெற்றது. அப்போது ஓய்வுக் கால நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து ஆராயப்பட்டது.
நன்றி:
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
15.10.10
அரசு உறுதி அளிக்காதவரை பி.எஃப். பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப...
-
இந்த இனிய விழாவில் முன்னிலையுரை ஆற்றிய மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துற...
-
ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், அரசின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. ஆசிரியர் தகுதி த...
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு ஜாக்டோ-ஜியோ 4ஆம் தேதி கூட்டத்தை கூட்டி பதிலளிக்க உள்ளதாக தெரிவித...
-
N-M June. 2012
-
கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய அர சுக்கு இணை யான ஊத...
-
பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் முப்பருவ கல்வி முறை மற்றும் கற்றலின் தொடர் மதிப்பீடு தொடர்பான பயிற்சி வகுப்புகளில் திட்டமிடல் இல்லை என, ...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக