தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

25.9.13

7வது ஊதியக் குழுவை அமைத்து பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு

 மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்த்த 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சி்ங், அறிவித்து உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடையப்போகிறார்கள்.

6-வது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள், 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன் மூலம் அப்போதைய நிலவரப்படி 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைந்தனர். இந்நிலையில் 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "7-வது சம்பள கமிஷன் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பெயர் குறித்த விவரம் விரைவி்ல் வெளியிடப்படும். இதற்கான பரிந்துரைகள் அமல்படுத்த 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர்" என்றார்.

ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன்

இதற்கி‌டையே நாட்டின் முதல்முறையாக ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ உயரதிகாரிகள், தங்களது சம்பள பிரச்னை குறித்து மத்திய அரசிடம் முறையிட்டனர். இதில் 6-வது சம்பள கமிஷனின் கோரிக்கை குறித்து வலியுறத்தினர். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7-வது சம்பள கமிஷனுடன், முதன்முறையாக ராணுவத்தினருக்கான சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுளளது.
.

24.9.13

ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தர ஊதியம், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாட பிரிவு தொடங்க வேண்டும். தொழிற்கல்வியில் நவீன பாட திட்டத்தை புகுத்த வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர்களை உடன் பணி வரன்முறை செய்ய வேண் டும். பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், உதவி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் வழங்க வேண் டும். தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி மாறுதல் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும், மேல்நிலை பள்ளி தொழிற்கல்விக்கு தனி இயக்குநரகம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தென் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

சங்க மாநில துணைத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். தூத்துக்குடி தலைவர் செல்வராஜ், விருதுநகர் தலைவர் முத்துராஜ், ராமநாதபுரம் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க குமரி மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் வரவேற்றார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் வள்ளிவேலு தொடக்கி வைத்தார். சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாகராஜன் போராட்டத்தை விளக்கி பேசினார். மாநில பொருளா ளர் நேரு, மூட்டாவை சேர்ந்த நாகராஜன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங், பால் செபாஸ்டின், ஞான செல்வ திரவியம், பல்வேறு ஆசிரியர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாலச்சந்திரன், ராபர்ட் ஜேம்ஸ், வேலவன்,  கனகராஜ், ராஜ குமார், செல்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் ஜிம்சன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
.

23.9.13

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், அரசின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு 32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்துவிட்டது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, “சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை.

இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி, சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜராகி, “தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது’’ என்றனர்.

இந்த வழக்கில் நீதிபதி அரிபரந்தாமன் இன்று அளித்த தீர்ப்பு:

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, ஆசிரியர்களுக்கு கட்டாயம் தகுதி தேர்வு வைக்கவேண்டும். தகுதி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு மட்டும்தான் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கல்வி கவுன்சில் தெளிவாக கூறியுள்ளது. உயர்நீதிமன்றமும் இதை உறுதி செய்துள்ளது. தற்போது தகுதி தேர்வில் வெற்றிப்பெற்றவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அப்படி இருக்கும்போது மனுதாரர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்க முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரிதான். அதை ரத்து செய்ய முடியாது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. ஏற்கனவே அவர்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார்.

நன்றி:

 

+ 2, 10ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு: மாணவர் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்


பிளஸ் 2, 10ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு நடைமுறைகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது. இம்மாற்றம் தமிழகம் முழுவதும் இன்று அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு துணை பொது தேர்வு இன்று (23ம் தேதி) முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒரே கால கட்டத்தில் வெவ்வேறு தேர்வு மையங்களில் நடைபெறும்.

இந்த தேர்வுக்கு 20 வினாத்தாள் அடங்கிய முத்திரையிட்ட வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஒரு வினாத்தாள் கட்டு வழங்கப்படும். வினாத்தாள் கட்டுக்களை தலைமை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் பிரிக்க கூடாது.

10 மற்றும் 12ம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கும் மாற்று எண் விடைத்தாள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய பார் கோடிங் ஷீட் அனைத்து தேர்வர்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும். பார் கோடிங்ஷீட் தான் புதிய டம்மி பிளை ஷீட் ஆகும்.
பார்கோடிங் ஷீட்டின் முதல் பகுதியை மாணவர்களும், 2ம் பகுதி மற்றும் 3ம் பகுதியை விடைத்தாள் திருத்தும் மையத்தில் உதவி தேர்வர்கள் பூர்த்தி செய்வர்.

மேல்நிலை தேர்வுக்கு இரண்டு டம்மி நம்பர் மெயின் ஷீட் எடுத்து பிளை லீப் அகற்றப்படுகிறது. பின்னர் இரண்டாவது முதன்மை விடைத்தாளின் முதல்தாளை அகற்றிவிட்டு, இரண்டு முதன்மை விடைத்தாள்களும் இணைக்கப்படுகிறது. இதனையடுத்து முதல் பக்கத்தில் மாணவர் புகைப்படத்துடன் கூடிய பார் கோடிங் வைத்து, தையல் இயந்திரம் மூலம் தைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்வில் ஒரு முதன்மை விடைத்தாளுடன் 22 பக்கங்கள் வரும் வகையில் கூடுதல் விடைத்தாள்கள் இணைத்து பார் கோடிங்ஷீட் தைக்கப்பட்டிருக்கும்.

20 மாணவர்கள் ஒரு தேர்வு அறையில் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வு அறையில் வினாத்தாள் உறையை மாணவர் இருவர் கையொப்பம் பெற்ற பின்னரே வழங்கவேண்டும்.

காலையில் 10.10க்கு விடைத்தாள்களை தேர்வர்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்து வழங்க வேண்டும். கூடுதல் விடைத்தாள் "கே" படிவத்தில் கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். 10.30 வரை தேர்வுக்கு வராத மாணவர்களின் தேர்வு எண்ணை உறையின் இடது புறத்தில் சிவப்பு மையால் எழுத வேண்டும். அவர்களின் விடைத்தாளின் பார்கோடிங் தாளில் "ஏ" என்பதை சிகப்பு மையால் "டிக்" செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நன்றி:


சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?

கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் தெரிந்துவிடும்.

தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அதாவது கடந்த 2010ம் ஆண்டு 32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்து விட்டது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை. இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி, சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகி, தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது என்றனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா என்று இன்று தெரியும்.

 நன்றி:


20.9.13

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி - அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும். ஆனால் நடப்பாண்டு ஜூலையில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர்.

இந்த அகவிலைப்படியின் பலன் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் இந்த ஊதிய உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 10,879 கோடி செலவாகும்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 1-இல் அகவிலைப்படி 10% உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, அகவிலைப்படி தற்போதுதான் இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
.

11.9.13

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நள்ளிரவு முதல் கனமழை தொடர்வதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
திட்டமிட்ட படி +1 , +2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
.

5.9.13

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் நீக்கம்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் கல்வித்துறையையும் கூடுதலாக கவனிப்பார்.
.

4.9.13

பென்சன் மசோதாவிற்கு லோக்சபா ஒப்புதல்

புதிய பென்சன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களுடன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாகபார்லிமென்டடில் இன்று நடந்த‌ கூட்டத்தில் லோக்சபாவில் , பென்சன் மசோதாவை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
 புதிய பென்சன் திட்டம் நீண்ட கால நோக்கில் பணியாளர்களுக்கு பலன் தரும். இதில் பார்லி., குழுவில் கருத்தொற்றுமை உள்ளது. இந்த புதிய பென்சன் திட்டத்திற்கு, சக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்

என கூறினார். 
.

கடலூர் மாவட்டத்தில் 12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் 12 பேர் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் விருது பெற அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விவரம்:

1.  வடலூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ஆளவந்தார்,

2. பண்ருட்டி திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஹரிமூர்த்தி,

3. கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பாரி,

4. மங்கலம்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வீரராகவன்,

5. ஸ்ரீமுஷ்ணம் தா.வி.சே. மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பாண்டியன், 

6. கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி முதுகலை ஆசிரியர் ராஜ்மோகன்.

7. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் செஞ்சிவேல்,

8. கடலூர் காரைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெகன்நாதன்,

9. பண்ருட்டி மாளிகைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் மார்க்,

10. கம்மாபுரம் தொப்பலிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மதலைமேரி,

11. கோபாலபுரம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முருகேசன்,

12 ஏ.வள்ளியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வர்ணபாபு.
.

திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு நல்லாசிரியர் விருது

திருச்சி மாவட்டத்தில் 17 பேர் மாநில அரசின் 2012-13 -ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர்) பெறுகின்றனர்.

விருது பெற்றோர் பட்டியல்
:

1. பொ. திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர், திருப்பராய்த்துறை விவேகானந்த மேல்நிலைப் பள்ளி,

2. இ. ஆம்ஸ்ட்ராங், பட்டதாரி ஆசிரியர், தூய வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி,

3. ம. செல்வன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருவெள்ளறை,

4. எஸ். ஆதிரை, பட்டதாரி ஆசிரியை, டால்மியா மேல்நிலைப் பள்ளி,

5. இரா. நாச்சி, தலைமை ஆசிரியர், தொட்டியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

6. அ. நாராயணசாமி, தலைமை ஆசிரியர், ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளி துறையூர்,

7. க. துளசிதாசன், முதல்வர், சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

8. பெ. சந்திரா, முதல்வர், டால்மியாபுரம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

9. க. ஆசாதேவி, தலைமை ஆசிரியை, பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

10. அ. விஜயலட்சுமி, தலைமை ஆசிரியை, முள்ளிக்கரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

11. சூ. அமலோற்பவம், தலைமை ஆசிரியை, உறையூர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி,

12. சி. ரோஸ்மேரி, தலைமை ஆசிரியை, அகலங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

13. மா. விஜயகுமார், தலைமை ஆசிரியர், நஞ்சை சங்கேந்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,

14. ச. முத்துமணி, தலைமை ஆசிரியர், பாண்டிபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,

15.ஏ.ஆர்.எல். திவ்யகுமார், தலை மை ஆசிரியர், துறையூர் எஸ்பிஜி நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளி,

16. பி. இந்திரா, தலைமை ஆசிரியை, மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப் பள்ளி,

17. பெ. தங்கவேல், தலைமை ஆசிரியர், வா. கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 10 ஆசிரியர்கள் தேர்வு

மாநில நல்லாசிரியர் விருதுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல்
:

1. பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலைஆசிரியர் பாலசுப்ரமணியன்,

2. திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலையாசிரியர் கலை,

3. சேவுகம்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சஞ்சீவி,

4. ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காளிமுத்து 

5. பித்தளைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமையாசிரியை ஜான்சிராணி,

6. வடகாட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்பீட்டர்,

7. நத்தம் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை பாக்கியவதி,

8. பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை மேபல்தவமணி தமிழரசி,

9. பூத்தாம்பட்டி தூய பிரான்சிஸ் சவேரியார் ஆர்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை மெர்சிஜெசிந்தா,

10. சுக்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முருகையா.
.

தேனி மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது

தேனி மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 10 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் விவரம்:

1. ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜே.மீனாட்சி,

2. பெரியகுளம் 10-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெ.நக்கீரன்,

3. சுந்தரராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன்,

4. கீழக்கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.ஜெகநாதன்,

5. தேவாரம் சி.ஐ. ராமசாமி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்ராஜன்,

6. போடி 10-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி இளநிலை ஆசிரியர் கோமதி,

7. ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கலை ஆசிரியர் முத்துவன்னியன்,

 8. தேனி அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் கரிகால்வளவன்,

9. குச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன்,

10. காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உடற் கல்வி ஆசிரியர் சண்முகராஜன்.
.

சிவகங்கை மாவட்டத்தில் 12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 12 ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:–

1. மனோகரன், தலைமை ஆசிரியர் அரசு மேல் நிலைப்பள்ளி, கீழப்பூங்குடி.

2. கணேசன், தலைமை ஆசிரியர் என்.எஸ்.எம். வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.

3. கிறிஸ்துராஜா, தலைமை ஆசிரியர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, ராஜ கம்பீரம்.

4. சண்முகநாதன், தொழிற் கல்வி ஆசிரியர் தி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.

5. கருப்பாயி, தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசனூர்.

6. ஜெயபிரகாசன், தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருகளப்பட்டி.

7. நாகலெட்சுமி, தலைமை ஆசிரியை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கே.புதுப்பட்டி

8. சுப்பிரமணியன் தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழக்கோட்டை.

9. மாரியப்பன், தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பர்மா காலணி, மானாமதுரை.

10. தட்சிணாமூர்த்தி, தலைமை ஆசிரியர் எஸ்.ஆர்.எம். தொடக்கப்பள்ளி, சண்முகநாத பட்டினம், தேவகோட்டை.

11. ஆனந்தி, தியாகராஜன் முதல்வர் அழகப்பா மெட்ரிக் பள்ளி, காரைக்குடி.

12. இமானுவேல் சம்பத் குமார், விரிவுரையாளர் ஆசிரியர் பயிற்சி மையம், காளையார் கோவில்.
.

விருதுநகர் மாவட்டத்தில் 16 பேருக்கு நல்லாசிரியர் விருது

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பள்ளியின் வளர்ச்சிக்காக பணியாற்றிய ஆசிரியர்கள் 16 பேர் நல்லாசிரியர் விருது பெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

விருது பெற அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரம் வருமாறு:

1. சித்ரா(முதல்வர்)-சிவகாசி கே.சி.ஏ.டி தர்மராஜ் நாடார்-தாயம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

2. சூ.ஆஞ்சலோ தெக்லாமேரி(உதவி ஆசிரியை)- செவல்பட்டி, அமலா தொடக்கப்பள்ளி,

3. ம.ஜெயபால்(தலைமை ஆசிரியர்)-சிவகாசி மேற்கு ஏவிடி நகராட்சி தொடக்கப்பள்ளி,

4. ரா.நாடியம்மாள்(தலைமை ஆசிரியை)- அலமேலுமங்கைபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

5. இரா.ராமசாமி(தலைமை ஆசிரியர்)-தூங்கரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

6. ஜெ.ஆனந்தராஜா(தலைமை ஆசிரியர்)-வீரசோழன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

7. மா.பொன்னுச்சாமி(தலைமை ஆசிரியர்)-செங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

8. பா.கிரேஸ்(தலைமை ஆசிரியை)-கடமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

9. அ.கமலாராணி(தலைமை ஆசிரியை)-டி.செட்டிக்குளம், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

10. சு.செல்வின்ஜெயக்குமார்(தலைமை ஆசிரியை)-தெற்குவெங்காநல்லூர், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

11. மு.வரதராஜபாண்டியன்(தலைமை ஆசிரியர்)-கூமாபட்டி அரசுமேல்நிலைப்பள்ளி,

12. பொ.சாந்தகுமாரி(தலைமை ஆசிரியை)-சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி,

13. சி.ஜமுனாராணி(தலைமை ஆசிரியர்)-விருதுநகர் ஹவ்வாபீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,

14. பெ.வரதராஜாபெருமாள்(முதுகலை ஆசிரியர்)-விருதுநகர் ஹாஜிபி மேல்நிலைப்பள்ளி,

15. டேவிட்ஞானசேகரன்(உடற்கல்வி ஆசிரியர்)-ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி,

16. வையனன்(உடற்கல்வி ஆசிரியர்) ராமநாயக்கன்பட்டி ஆர்.வி.கே உயர்நிலைப்பள்ளி
.

மதுரை மாவட்டத்தில் 17 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

தமிழக அரசின் 2012– 13–ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது நேற்று அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–

1. தே.கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் பெ.வி.தனசேகரன்,

2. அழகர் கோவில் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் கோ.வெங்கடராமன்,

3. திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அர்ச்சுனன்,

4. மதுரை சவுராஷ்டிரா மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.வி.சுகந்திமாய்,

5. சக்கிமங்களம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா,

6. கருப்பாயூரணி அப்பர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜேனட்மேரி ரெஜிபாய்,

7. மேலக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன்,

8. திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் உதயகுமார்,

9. அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுபிதாராணி.

10. மதுரை கீழவெளி வீதி சவுராஷ்டிரா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பாவா மகேஸ்வரி,

11. அலங்கா நல்லூர் ஒன்றியம் 15 பி, மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ரூபி சாலம்மாள் வசந்த மல்லிகா,

12. மேலூர் ஒன்றியம், கீழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சோம.மாணிக்கவல்லி,

13. மதுரை மேற்கு ஒன்றியம் சமயநல்லூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பாத்திமாமேரி,

14. மதுரை கிழக்கு ஒன்றிய காளி காப்பான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பெனிட்டோ ராணி,

15. கள்ளிக்குடி ஒன்றியம் குராயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார்,

16. தே.கல்லுப்பட்டி ஒன்றியம், பி.சுப்புலாபுரம் ஸ்ரீநிவாச பெருமாள் நிதியுதவி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போஸ்,

17. சேடப்பட்டி ஒன்றியம், இ.கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.அருண்குமார் .
.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 தலைமை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 15 தலைமை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது நாளை சென்னையில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

குமரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் விபரம்:

1. டி.ஜெபதிலகம் பாப் பாள், தலைமை ஆசிரியர், ஹோம் சர்ச் தொடக்க பள்ளி, நாகர்கோவில்.

2. ஜெ.சாம்ஜி ஐசக் சந்திரா, தலைமை ஆசிரியர், அரசு தொடக்க பள்ளி, மயிலாடி (மேற்கு).

3. எம்.அப்துல் கபூர், தலைமை ஆசிரியர், அரசு தொடக்க பள்ளி சுசீந்திரம்.

4. ஏ.ஜஸ்டின்ராஜ், தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைபள்ளி, திருவிதாங்கோடு.

5. எல்.மேரி ஜாய்ஸ், தலைமை ஆசிரியர், அரசு தொடக்க பள்ளி, குளச்சல்.

6. பி.சுசீலா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலை பள்ளி, விலவூர்.

7. ஏ.மரிய கனகபாய், தலைமை ஆசிரியர் அரசு தொடக்க பள்ளி, ஐரேனிபுரம்.

8. ஏ.செல்வி பிலோமின், தலைமை ஆசிரியர், புனித மேரி ஆர்சி தொடக்க பள்ளி, நெல்லிக்காவிளை.

9. ஏ.சோபனம், தலைமை ஆசிரியர் அரசு நடுநிலை பள்ளி, பள்ளிக்கல்.

10. எஸ்.ரீடா மில்ரெட் கோல்டி, தலைமை ஆசிரியர், எஸ்எல்பி ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி, நாகர்கோவில்.

11. எப்.ஜாண் கிறிஸ்டோபர், தலைமை ஆசிரியர், பாபுஜி மேல்நிலை பள்ளி, மணவாளக்குறிச்சி.

12. அ.மோகனன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலை பள்ளி, மத்திக்கோடு

13. கே.சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர், எஸ்எம்ஆர்வி மேல்நிலை பள்ளி, வடசேரி.

14. வி.ஆர்.ராஜ்குமார், தலைமை ஆசிரியர், எல்எம்எஸ் மேல்நிலை பள்ளி, கடமலைக்குன்று.

15. ஜி.வசந்தபாய், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலை பள்ளி, கடையல்.
.

370 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது நாளை வழங்கப்படுகிறது

தத்துவமேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நாளை (5–ந்தேதி) ஆசிரியர் தின விழா சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு பள்ளிக் கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்குகிறார். பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

விழாவில் 370 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. விருதினை பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் வழங்குகிறார்.

தொடக்க கல்வி துறையில் 196 ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வி துறையில் 134 பேருக்கும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 25 பேருக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் 10 பேருக்கும் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 2 பேருக்கும் சமூக நலத்துறை பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன், சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி, இயக்குனர்கள் சங்கர், பிச்சை, கண்ணப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

முடிவில் தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் நன்றி கூறுகிறார்.
.

அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம் - ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை; மத்திய அரசு ஏற்பு

"மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை" என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, லோக்சபாவில்  கூறியதாவது:
"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்" என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம்" என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. சம்பள கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது. ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது.

அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி: தினமலர் 31-08-2013
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்